டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டதை அடுத்து வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அந்நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், சுற்றுச்சூழல் விதிகள் முறையாக பின்பற்றப்பட்டது வேண்டும், ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகள், புகையால் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலையின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: வேதாந்தா நிறுவனத்தின் மனு பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை
