கோவை, பிப்.15: கோவை, தீனம்பாளையம், கொங்கு நாடு இன்ஸ்டிட்யூட் ஆப் அலைட் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் பிஎஸ்சி மருத்துவம் சார்ந்த படிப்புகள் படிக்கும் முதலாமாண்டு மாணவ மாணவிகளுக்கு வெள்ளைக் கோட் அணியும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தஞ்சாவூர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளருமான டாக்டர் சுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கொங்குநாடு அலைடு ஹெல்த் இன்ஸ்டிட்யூட் கல்லூரியின் தலைமை அறங்காவலர் டாக்டர் ராஜூ தலைமை தாங்கினார். இவ்விழாவிற்கு கொங்குநாடு அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் இன்ஜினியர் ஆர்த்தி விஸ்வநாதன், கல்லூரியின் முதல்வர் டாக்டர் முரளிதரன் மற்றும் நிர்வாக அதிகாரி நாசர், ஆசிரியர் பெருமக்கள் மாணவ மாணவிகள், அவர்களின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் வெள்ளை கோட் அணியும் விழா appeared first on Dinakaran.