சென்னை: வனத்துறையினர் அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என சென்னையில் நடைபெற்ற பயிலரங்கில் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார். வன அலுவலகம், வனப்பகுதி, சுற்றுலா இடங்களில் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என கூறினார். சரணாலயம், புலிகள்காப்பகம், வனப்பகுதி வழிபாட்டுதலங்களில் பிளாஸ்டிக் கூடாது என கூறினார். நீர் நிலைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்த கூடாது எனவும் கூறினார்.
