திருவள்ளூர்: திருவள்ளூரில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலில் மாவட்ட நிர்வாகிகள் ஜெ.டி.அருள், தளபதி மூர்த்தி, பி.ரமேஷ், வி.இ.ஜான், பி.தங்கவேலு, பூண்டி ஆர்.ராஜா, சி.சுப்பிரமணி, சரஸ்வதி, சிவாரெட்டி, தியாகராஜன், பிரபாகரன், செல்வம், நடராஜ், மதிவாணன், முருகன், ஏழுமலை, பொன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன், சி.பி.மோகன்தாஸ், சம்பத், ஒய்.அஸ்வின்குமார், கோவிந்தராஜ், இமாலய கே.அருண்பிரசாத், சசிகுமார், ஜெ.கே.வெங்கடேசன், முருகன், ஆ.திவாகர், கே.ஜி.புருஷோத்தமன், ஜோதி மற்றும் வட்டார தலைவர்கள் ஜி.எம்.பழனி, எம்.கே.மணவாளன், இருதயராஜ், முகுந்தன், முருகன், அன்பு, சரவணன், ஆறுமுகம், மதன்மோகன், ரஞ்சித்குமார், பெரியசாமி, மூர்த்தி, கார்த்திகேயன், கோவிந்தராஜ், பொன்னுரங்கம் உள்பட 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்….
The post வேளாண் சட்டங்களை திரும்பபெற கோரி காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்: 200 பேர் கைது appeared first on Dinakaran.