சென்னை : சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ வெளியானது. அதிமுக சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் ஜெ.எம்.பஷீர் வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் வீடியோ வெளியானது.சேப்பாக்கத்தில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சியான பாமக வேட்பாளர் கஸாலிக்கு வாக்கு கேட்டு பணம் பட்டுவாடா நடைபெறுகிறது.வாக்களர்களை வீட்டுக்கே வரவழைத்து, வாக்காளர் அட்டையை சரிபார்த்து பணம் கொடுக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
