காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி வழியாகச் செல்லும் வேகவதி ஆற்றில் கரையின் இரு புறங்களையும் ஆக்கிரமிப்பு செய்து வீடுகட்டி பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில், வேகவதி ஆற்றில் கரைகளை அகலப்படுத்தும் பணிகள் தொடங்கின. இதனால், அங்கு குடியிருந்த மக்களுக்கு கீழ்கதிப்பூர் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த வீடுகளில் ஒதுக்கீடு பெற்றவர்கள் வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை காலி செய்யாமல் தொடர்ந்து அங்கேயே வசித்து வந்தனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் வேகவதி ஆற்றின் கரையோரம் தாயார் குளம் பகுதியில் உள்ள அண்ணா நகர் குடியிருப்பில் ஆக்கிரமிப்பு செய்து காலி செய்யாமல் உள்ள 78 வீடுகளை பொக்லைன் இயந்திரனம் மூலம் அதிகாரிகள் நேற்று இடித்து அகற்றினர். இதற்காக ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post வேகவதி ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் appeared first on Dinakaran.