வீல்சேரில் வந்து ஓட்டு போட்ட 110 வயது மூதாட்டி

திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 35வது வார்டு பகுதியில் வசிக்கும் 110 வயதான நீலாவதி என்ற மூதாட்டி ஆர்வமுடன் வந்து வாக்களித்தார். இதற்காக ஜானகி பொன்னுசாமி நகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்துக்கு வீல் சேரில் வந்தார். வாய் பேச முடியாத அவர் கடந்த 50 ஆண்டுகளாக ஜனநாயக கடமை தவறாமல் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்து வருகிறாராம். தள்ளாத வயதிலும் மூதாட்டி சக்கர நாற்காலியில் வந்து ஜனநாயக கடமை ஆற்றியது அந்த வாக்குச்சாவடி மையத்திற்கு வந்திருந்தவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு எம்ஜிஆர் நகரில் வசிக்கும்  96 வயதான மூதாட்டி தெரசா தனது வாக்கை செலுத்த வேண்டும் என மிகுந்த ஆர்வத்துடன் உறவினர்களிடம் கூறினார். இதனையடுத்து அவரை பிளாஸ்டிக் சேரில் அமர வைத்து 4 பேர் வாக்குச்சாவடிக்கு தூக்கி வந்தனர். தொடர்ந்து வாக்குச்சாவடிக்குள் சுமந்து சென்றனர். பின்னர் தெரசா தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். ‘‘ஓட்டுப்போட்டுவிட்டேன்’’ என்று அங்கிருந்தவர்களிடம் தெரசா மகிழ்ச்சியுடன் தெரிவித்தது நெகிழ்ச்சியடைய செய்தது.வீல் சேரில் வந்து வாக்களிப்பு: கோவை நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி. 95 வயது முதியவரான இவர், வயது மூப்பின் காரணமாக நடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். ஆனாலும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்து தனது கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக அவர் நேற்று காலையிலேயே நல்லாம்பாளையம் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு வந்தார். அவருக்கு அதிகாரிகள் வீல் சேர் வழங்கினர். தொடர்ந்து அவர் தனது வாக்கை பதிவு செய்துவிட்டு வீடு திரும்பினார்.பழங்குடியினர் ஆர்வம்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட கொல்லிமலை பழங்குடியினர் கிராமத்தில் கோத்தர் பழங்குடியின மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த பழங்குடியின மக்கள் நேற்று பேரூராட்சி தேர்தலில் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இதற்காக அவர்கள் பாரம்பரிய உடையணிந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்தனர்.குன்னூர் நகராட்சி மற்றும் உலிக்கல் பேரூராட்சியில் அதிகளவில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக நேற்று சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் தொழிலாளர்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டினர்….

The post வீல்சேரில் வந்து ஓட்டு போட்ட 110 வயது மூதாட்டி appeared first on Dinakaran.

Related Stories: