திருவள்ளூர்: விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் நடக்கிறது. இதுகுறித்து கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரும் 26ம் தேதி நடக்கிறது. வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத் துறை, வங்கிகள் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மின்வாரியம், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித் துறை மற்றும் இதர வேளாண் சார்ந்த துறை அலுவலர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் இதில் விவசாயிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் அனைவரும் சமூக இடைவெளி பின்பற்றியும் முககவசம் அணிந்து வரவேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
The post விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் appeared first on Dinakaran.