சென்னை: கொரோனா வைரஸ் உலக மக்களை பயங்கரமாக அச்சுறுத்தி வருகிறது. தமிழ் திரையுலகை சேர்ந்த பலர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று மீண்டுள்ளனர். இந்நிலையில் நடிகரும், இயக்குனரும், முன்னாள் எம்.பியுமான ராமராஜன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் கிண்டியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
