விராலிமலையில் உடைந்த நிலையில் இருந்த மின் கம்பம் அகற்றி புதிதாக அமைப்பு

 

விராலிமலை,ஆக.24: பழுதடைந்த மின் கம்பம் தினகரன் செய்தி எதிரொலியாக ஒரே நாளில் மாற்றப்பட்டு புதிய மின் கம்பம் நடப்பட்டது. தகவலறிந்து ஒரே நாளில் நடவடிக்கை எடுத்த மின் வாரிய அதிகாரிகளுக்கு குடியிருப்பு வாசிகள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.விராலிமலை அம்மன் கோவில் வீதி அம்மன் கோயில் பின்புறம் உள்ள பி 3 என்ற எண் கொண்ட மின் கம்பத்தின் அடிப்பகுதி உடைந்து உள்ளிருக்கும் துருப்பிடித்த ஒரு சில இரும்பு கம்பிகளின் துணையோடு நின்று கொண்டிருந்தது.

பழுதடைந்த அந்த கம்பத்திலிருந்து சுமார் இருபதுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக அந்த கம்பத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் குடியிருப்புகளுக்கு மின்சாரம் தடை பட்டதாகவும். மின்வாரியத்தை தொடர்பு கொண்டு இது குறித்து கூறியதைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் நிகழ்விடம் வந்து பார்த்தபோது கம்பத்தின் அடிப்பகுதி உடைந்து இருப்பதால் மேலே ஏறி சரி செய்ய முடியாது என தெரிவித்து விட்டதாகவும்.

அதனால் குடியிருப்புகளில் மின்சாரம் இல்லாமல் இரவு முழுவதும் தவித்தனர் என்றும் இதுகுறித்து மின் வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கையில் இறங்கிய, உடைந்து நின்று கொண்டு இருந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிய மின் கம்பத்தை நட்டுவைத்து மின் விநியோகத்தை சீராக்கினர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினகரன் மற்றும் மின்வாரிய அலுவலர்களுக்கு அப்பகுதி குடியிருப்பு வாசிகள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

 

The post விராலிமலையில் உடைந்த நிலையில் இருந்த மின் கம்பம் அகற்றி புதிதாக அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: