திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் 3 நோயாளிகள் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் தாராபுரம் பகுதியில் திருப்பூர் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதற்கிடையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இன்றைய தினம் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 3 நோயாளிகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதாவது இன்று காலையிலிருந்து கொரோனா வார்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் 40 நிமிடம் மின்சாரம் துண்டிப்பு: ஆக்ஸிஜன் தடைபட்டு கொரோனா நோயாளிகள் 3 பேர் உயிரிழப்பு!!
