விபத்தை தவிர்க்க வேகத்தடைக்கு வர்ணம் பூச கோரிக்கை

கரூர்: கரூர் மாவட்ட கிராம பகுதிசசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில் வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர், கரூர் மாவட்டத்தின் முக்கிய நகரப்பகுதிகள் மட்டுமின்றி, உட்கிராமங்கள் அனைத்து பகுதிகளுக்கும் வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் உட்புறச் சாலைகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த வகைச் சாலைகளில் பிரதான வளைவு மற்றும் பல்வேறு சாலைகள் சந்திப்பு ஆகிய பகுதிகளில் விபத்தினை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஆனால், இதுபோன்ற பெரும்பாலான வேகத்தடைகளில் வர்ணம் பூசவில்லை. இதனால் இரவு நேரங்களில் வேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்வதாக கூறப்படுகிறது.

The post விபத்தை தவிர்க்க வேகத்தடைக்கு வர்ணம் பூச கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: