விபத்தில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கு நிதியுதவி டிஆர்ஓ வழங்கினார் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாமில்

வேலூர், அக்.27: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் விபத்தில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கு நிதியுதவி டிஆர்ஓ வழங்கினார். வேலூர் மாவட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர மாற்றுத்திறனாளிகளின் குறைகளைகளையும் பொருட்டு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக்கொண்டு 2 மாதங்களுக்கு ஒருமுறையும் கோட்ட அளவில், ஆர்டிஓ தலைமையில் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக் கொண்டு மாதத்திற்கு ஒரு முறையும் குறைதீர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, அக்டோபர் மாதத்திற்கான மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த முகாமில் டிஆர்ஓ மாலதி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, விபத்தில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் 2 பேருக்கு தலா ₹2 லட்சம் என ₹4 லட்சம் மற்றும் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ₹5.36 லட்சம் காசோலை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுலவர் சரவணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

The post விபத்தில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி குடும்பத்தினருக்கு நிதியுதவி டிஆர்ஓ வழங்கினார் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் appeared first on Dinakaran.

Related Stories: