×

விண்ணப்பம் வழங்கல் குறித்த ஆலோசனை கூட்டம்

 

போடி, ஜூலை 25: போடியில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை வீடுகள் தோறும் வழங்குவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம், தாசில்தார் தலைமையில் நடைபெற்றது. போடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் போடி தாசில்தார் அலுவலகத்தின் சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ரூ.1000 பெறுவதற்கான விண்ணப்பம் வழங்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தாசில்தார் அழகுமணி தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் ராமராஜ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், செப்டம்பர் 15ம் தேதி குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்கான நபர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. இதன்படி விண்ணப்பங்கள் நேரடியாக விநியோகம் செய்யும் முறை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ரேஷன் கடை ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்கும் விதமாக தன்னார்வலர்கள், மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் உதவியுடன் ரேஷன் கடை பணியாளர் தலைமையில் இந்த பணிகளை நேரடியாக மேற்கொள்வது என்றும், வீடுகள் தோறும் சென்று விண்ணப்பங்களை வழங்குவது என்றும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

The post விண்ணப்பம் வழங்கல் குறித்த ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Bodi ,Dinakaran ,
× RELATED ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பால் போடி...