திருவனந்தபுரம்: பாலக்காடு அருகே இளம் தம்பதி முதல் பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் அனைவரின் புருவங்களையும் உயர்த்த வைத்துள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு செர்புளச்சேரி சளவற பகுதியை சேர்ந்தவர் முஹமது முஸ்தபா. இவரது மனைவி முபீனா. இந்த இளம்தம்பதி முதல் பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். பெரிந்தல்மண்ணா மவுலானா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் டாக்டர் அப்துல் வஹாப் தலைமையிலான டாக்டர் குழு கடந்த 16ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் 4 குழந்தைகளையும் வெளியே எடுத்தனர். 4ம் ஆண் குழந்தைகள்.
பாலக்காடு அருகே ருசிகரம்; ஒரே பிரசவத்தில் ‘4 குட்டீஸ்’ மகிழ்ச்சியில் இளம்ஜோடி
