விருதுநகர், பிப். 10:விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், காரியாபட்டி ஆகிய வட்டாரங்களில் 184 ஊராட்சிகளில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்பட்டு வருகிறது. திட்டத்தின் மூலம் தொழில் முனைவோர்களை ஊக்குவித்தல், நிதியுதவி வழங்குதல், பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டத்தில் பெண் தொழில் முனைவோர்களை மேம்படுத்தும் வகையில் “TN-RISE WOMEN STARTUP MISSION” என்ற திட்டம் துவங்கப்படுகிறது. இதில் பயன்பெற பெண் தொழில் முனைவோராக இருத்தல் வேண்டும்,
உற்பத்தி தொழில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், பொட்டலமிடல், அடையாள குறியீடு இடுதல், சந்தைப்படுத்துதல், தொழில் விரிவாக்கம் செய்ய ஆர்வமுள்ளவராக இருத்தல் வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறம் அல்லது நகர்புறத்தை சேர்ந்த தொழில்முனைவோர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் 21 வயதிற்கு மேற்பட்டவராக, உற்பத்தி தொழில் துவங்க ஆர்வம் உள்ள பெண்களாக இருக்க வேண்டும். தகுதி உள்ள எந்த ஒரு பெண் தொழில் முனைவோர்களும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், பூமாலை வணிக வளாகம், பழைய பஸ் நிலையம் அருகில், விருதுநகர் என்ற முகவரில் தொடர்பு கொள்ளலாம். மேலும் 9489989425, 8056361770 எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் பெண் தொழில் முனைவோர்கள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.