×

வாலிபரை தாக்கிய 7 பேருக்கு வலை

களக்காடு, நவ.17: களக்காடு அருகே வாலிபரை தாக்கிய தந்தை, மகன்கள் உள்பட 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர். களக்காடு அருகே சிங்கிகுளம் மலையடியை சேர்ந்தவர் நீலகனி மகன் மகேஷ் என்ற அஜித் (23). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கந்தசாமி மகன் ராமன் (45) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று அஜித் தனது நண்பர் சிவாவுடன் ராமன் வீடு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது ராமன், அவரது மகன்கள், மனைவி இசைவாணி, அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன், அவரது மகன் முத்து (35) உள்பட 7 பேர் சேர்ந்து அஜித்தை பிளாஸ்டிக் குழாயால் தாக்கினர். இதில் காயமடைந்த அவர் களக்காடுஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து களக்காடு போலீசில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமன் உள்பட 7 பேரை தேடி வருகின்றனர்.

The post வாலிபரை தாக்கிய 7 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Kalakadu ,Kalakkad ,Dinakaran ,
× RELATED தேவநல்லூர் சிறப்பு மருத்துவ முகாமில்...