வாங்கல் அக்ரஹாரத்தில் பூட்டிய நூலக கட்டிடம் பயன்பாட்டிற்கு வருமா?

கரூர், பிப். 28: கரூர் மாவட்டம் வாங்கல் அக்ரஹாரத்தில் பூட்டிய நிலையில் உள்ள நூலக கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருர் மாவட்டம் வாங்கல் அக்ராஹாரம் பகுதி யில் கடந்த சில ஆண்டுக ளுக்கு முன்பு நூலக கட்டிடம் கட்டப்பட்டு பயன்பா ட்டுக்கு கொண்டு வரப்பட்டது.அந்த நூலகத்தை இந்த பகுதியினர் ஏராளமானோர் தினமும் பயன்படுத்தி வந்தனர். தற்போதைய நிலையில், பல்வேறு காரணங்களால் நூலக கட்டிடம் செயல்பாடின்றி பூட்டிய நிலையில் உள்ளது.இதன் காரணமாக எந்த காரணத்திற்காக நூலகம் கொண்டு வரப்பட்டதோ அதன் பயனின்றி இந்த கட்டிட வளாகம் உள்ளது.

எனவே, இதனை திரும்பவும் செயல்பாட்டு க்கு கொண்டு வர வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடுகளையாவது மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். துறை அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி நூல கட்டிடத்திற்கான மாற்று ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post வாங்கல் அக்ரஹாரத்தில் பூட்டிய நூலக கட்டிடம் பயன்பாட்டிற்கு வருமா? appeared first on Dinakaran.

Related Stories: