வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

 

மயிலாடுதுறை,நவ.5: மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி, கஞ்சாநகரம், திருநன்றியூர் ஊராட்சியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் முகாம் நடைபெறுவதை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட குருமூர்த்தி நடுநிலைப்பள்ளி, மயிலாடுதுறை வட்டத்திற்குட்பட்ட மனக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சீர்காழி வட்டத்திற்குட்பட்ட கஞ்சாதகரம் பார்த மாதா உதவி தொடக்கப்பள்ளி, செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட நத்தம் ஊராட்சி திருநன்றியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் முகாம் நடைபெறுவதை மாவட்ட கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆர்டிஓ யுரேகா, வட்டாட்சியர் சுபிதா தேவி, நகராட்சி ஆணைய சங்கர், சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, பூம்புகள், சீர்காழி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 860 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தம், நீக்கல், திருத்தம் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

The post வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் appeared first on Dinakaran.

Related Stories: