×

வாக்காளர் திருத்த பணி கலந்தாய்வு

சிவகங்கை, நவ.5: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷாஅஜித் தலைமை வகித்தார். வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் சுந்தரவள்ளி ஆய்வு செய்து பேசியதாவது:  1.1.2024ஐ தகுதி நாளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து 5,73,291 ஆண் வாக்காளர்களும், 5,93,318 பெண் வாக்காளர்களும் மற்றவர்கள் 51 வாக்காளர்களும் என ஆக மொத்தம் 11,66,660 வாக்காளர்கள் உள்ளனர்.

மொத்தம் 1,357 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்திலுள்ள வாக்காளர்களில் ஒன்றிக்கும் மேற்பட்ட பதிவுகள் இருக்கும் வாக்காளர்கள் குறித்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் அறிந்து அதற்கான ஏற்படுத்தப்பட்டுள்ள படிவங்கள் வாயிலாக தெரிவிக்கலாம். அரசியல் கட்சி பிரதிநிதிகள் புதுப்பிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பட்டியலை வழங்க வேண்டும்.

இணையத்தின் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் ஆகியவைகளை மேற்கொள்ளலாம். கூடுதலாக ஏதேனும் கோரிக்கைகள் இருப்பின் அதனை மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக தெரிவிக்கலாம். இவ்வாறு பேசினார். கூட்டத்தில் ஆர்டிஓக்கள் சுகிதா, பால்துரை, தனி தாசில்தார் மேசியாதாஸ் மற்றும் தாசில்தார்கள், நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வாக்காளர் திருத்த பணி கலந்தாய்வு appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai Collector ,Asha Ajith ,Dinakaran ,
× RELATED இன்று டாஸ்மாக் விடுமுறை