சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 28ம் தேதி நமது அரசு வலைதளத்தை துவக்கி வைத்து முதல்வர் பேசியதாவது: “நமது அரசு” வலைத்தளம் 91 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீல் தமிழ்நாடு மின்னாளுமை ஆணையரகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், அரசின் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கும், அரசுக்குமிடையே உரையாடல்கள் வாயிலாக கருத்துப் பரிமாற்றம் செய்து, மக்கள் நலன் சார்ந்த நேர்வுகளில் அரசுக்கு ஆலோசனைகள் வழங்கும் தளமாக இருக்கும். அரசு இயந்திரத்தை எளிதாக மின்னணு வழியில் தொடர்பு கொள்ளவும். மேலும், தற்போதுள்ள திட்டங்கள் மற்றும் எதிர்கால நலத்திட்டங்கள் குறித்து கருத்துக்களைப் பெற்று, அவற்றை மேம்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை மேற்கொள்ளவும், மக்களின் தேவைகளுக்கேற்ப புதிய திட்டங்களை வகுக்கவும் அரசுக்கு உறுதுணையாக அமையும்.
மக்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள ‘நமது அரசு’ வலைதளம்: முதல்வர் எடப்பாடி துவக்கினார்
