வலங்கைமான் வர்த்தகர் சங்க கட்டிடம் சீரமைக்கும் பணி

வலங்கைமான், ஜூலை 30: வலங்கைமான் வர்த்தகர் சங்க கட்டிடம் சீரமைக்கும் பணிக்கு வலங்கைமான் பெரிய பள்ளிவாசல் ஜமாத் சார்பில் வர்த்தகர்கள் ஒருங்கிணைந்து நிதி உதவி அளித்தனர். வலங்கைமான் வர்த்தகர் சங்கத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நிர்வாகிகள் வலங்கைமான் கடைவீதியில் ராமசாமி கோயில் அருகே உள்ள வர்த்தகர் சங்க கட்டிடத்தை சீரமைத்து வருகின்றனர்.

இந்நிலையில் வர்த்தகர் சங்கத்தினருக்கு உதவும் பொருட்டு வலங்கைமான் பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் காதர் ஹுசைன், செயலர் யாகூப் சலீம் பொருளாளர் ரஜிமுதீன், துணைத்தலைவர் ஜாஹீர் மற்றும் நிர்வாகிகள் வர்த்தகர் சங்க தலைவர் குணசேகரனிடம் 25 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கினர். இதில் வர்த்தகர் சங்க கௌரவ தலைவர் பரதாழ்வார், துணை தலைவர் மாரிமுத்து செயலாளர் திருநாவுக்கரசு பொருளாளர் புகழேந்தி இணை செயலாளர் சிவசங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர் வர்த்தகர் சங்க கட்டிடம் சீரமைப்பு பணிக்கு நன்கொடை வழங்கிய பெரிய பள்ளிவாசல் ஜமாத் அமைப்பினருக்கு வலங்கைமான் வர்த்தகர்கள் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

The post வலங்கைமான் வர்த்தகர் சங்க கட்டிடம் சீரமைக்கும் பணி appeared first on Dinakaran.

Related Stories: