வரும் 21ந் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் செயற்பொறியாளர் தகவல்

 

திருவாரூர், பிப். 16: திருவாரூர் கோட்ட செயற்பொறியாளர் செந்தமிழ்ச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் துர்காலயா சாலையில் இயங்கி வரும் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் திருவாரூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 21ந் தேதி நடக்கிறது. அதன்படி காலை 11 மணியளவில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும். இந்த கூட்டத்தில் திருவாரூர் நகரம், புறநகர், கச்சனம், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம், திருவாஞ்சியம், ஆலங்குடி, வலங்கைமான், பூந்தோட்டம், பேரளம், வேலங்குடி மற்றும் அதம்பார் பகுதிகளுக்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை நேரில் விண்ணப்பம் அளி த்து பயன்பெறலாம்.

 

The post வரும் 21ந் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் செயற்பொறியாளர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: