×

வரத்து குறைவால் எண்ணெய், பாமாயில் பருப்பு விலை உயர்வு

விருதுநகர்: வடமாநிலங்களில் தொடர் மழை, கேரளாவில் ஓணம் பண்டிகையால் எண்ணெய், பருப்பு வகைகளின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், வரத்து குறைவால் விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, நல்லெண்ணெய், பாமாயில், கடலை எண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. நல்லெண்ணெய் டின் ரூ.247, பாமாயில் டின் ரூ.80, கடலை எண்ணெய் டின் ரூ.70 விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.4,868க்கு விற்ற நல்லெண்ணெய் டின் (15 கிலோ) இந்த வாரம் ரூ.5,115, ரூ.1,960க்கு விற்ற பாமாயில் டின் ரூ.2,040, ரூ.2,880க்கு விற்ற கடலை எண்ணெய் டின் ரூ.2,950 என விலை உயர்ந்துள்ளது. உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு மூட்டைக்கு ரூ.1,000 வரை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.8,200க்கு விற்ற லைன் உளுந்து (100 கிலோ), இந்த வாரம் ரூ.9,000க்கு விற்பனையானது. இதேபோல, ரூ.7,600க்கு விற்ற நாடு உளுந்து ரூ.8,500, ரூ.8,000க்கு விற்ற பர்மா உளுந்து பருவட்டு ரூ.8,800, ரூ.7,300க்கு விற்ற பர்மா பொடி ரூ.7,900, உருட்டு உளுந்தம்பருப்பு நாடு ரூ.10,300, ரூ.11,000க்கு விற்ற லைன் உருட்டு உளுந்தம்பருப்பு ரூ.12,000, ரூ.10,000 பர்மா துவரை (100 கிலோ) ரூ.8,000, ரூ.8,000க்கு விற்ற லைன் துவரை ரூ.9,000, ரூ.10,500க்கு விற்ற லைன் துவரம்பருப்பு ரூ.11,500, ரூ.9,800க்கு விற்ற பர்மா துவரம்பருப்பு ரூ.10,500, ரூ.9,000க்கு என விற்பனையானது….

The post வரத்து குறைவால் எண்ணெய், பாமாயில் பருப்பு விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,northern states ,Onam festival ,Kerala ,Dinakaran ,
× RELATED விருதுநகர் லாட்ஜில் தங்கி உல்லாசம்...