கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்றுள்ள அதிரடி வீரர் கிறிஸ் கேல் (41) நடப்பு தொடரில் இதுவரை களமிறங்கவில்லை. ‘ஃபுட் பாய்சன்’ ஏற்பட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது முழுமையாக குணமடைந்துள்ளார். இதையடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக ஷார்ஜாவில் நாளை நடக்க உள்ள லீக் ஆட்டத்தில் கிறிஸ் கேல் விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக பஞ்சாப் அணி தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனால் ஷார்ஜாவில் கேல் சிக்சர் மழை பொழிவாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கிறிஸ் கேல் ரெடி!
