மதுரை: சட்டம், விவசாயம் உள்ளிட்ட படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அமைக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சேர்ந்த வக்கீல் மனோஜ் இம்மானுவேல், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் ஏராளமாக உள்ளன. அதே நேரம் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் தவிர்த்து இதர உயர்படிப்புகளுக்குத் தேவையான வழிகாட்டுதலை வழங்க போதுமான வாய்ப்புகளோ, மையங்களோ இல்லை. சட்டம், கல்வியியல், கணக்குத்தணிக்கை, விவசாயம், கவின்கலை, மேலாண்மை என பல துறைகள் உள்ளன.
சட்டம், விவசாயம் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி மையம்? தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு
