கரூர்: வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தொழிலாளியின் மனைவிக்கு அரசு பணிக்கான ஆணையை கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் சார்பில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குளித்தலை வட்டம், மேல்நங்கவரம் அண்ணா நகரைச் சேர்நத தங்கராஜ் என்பவான் உயிரிழந்ததார். அதையடுத்து அவரின் மனைவி புவனேஷ்வரி என்பவருக்கு மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பதிவுறு எழுத்தராக பணிக்கான ஆணையை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார். இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் சண்முகவடிவேல் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
The post வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தொழிலாளியின் மனைவிக்கு அரசு பணிஆணை appeared first on Dinakaran.