வருசநாடு, செப். 6: தமிழக கேரள எல்ைல பகுதி மலைக்கிராமங்களில் சிறுத்தை, யானை, மான், கேளையாடு, காட்டெருமை, கரடி, நரி உள்ளிட்ட விலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன. இவ்விலங்குகள் அடிக்கடி வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களுக்குள் புகுந்து விடுவது வழக்கம். விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் வனத்துறையினர் வனப்பகுதியில் எல்லையில் அகழி அமைத்தல், சோலார் மின்வேலி அமைத்தல் போன்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும், உரிய பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் வனப்பகுதியை விட்டு வெளியே வரும் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகளை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிலர் ஆர்வமுடன் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கின்றனர். இதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்கின்றனர். இந்நிலையில் வனவிலங்குகளை பொதுமக்கள் படம் பிடிக்க வேண்டாமென வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post வனவிலங்குகளை புகைப்படம் எடுக்க வேண்டாமென வேண்டுகோள் appeared first on Dinakaran.