வத்தலக்குண்டு அருகே ரூ.27 லட்சத்தில் குடிநீர் திட்ட பணிகள் தொடக்கம்

வத்தலக்குண்டு, செப். 13: வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் மல்லணம்பட்டி ஊராட்சி அழகாபுரியில் ரூ.18 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டியும், அப்பகுதி முழுவதும் பைப் லைன்கள் அமைக்க ரூ.9 லட்சமும் மொத்தம் அப்பகுதி குடிநீர் திட்டத்திற்கு ரூ.27 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளது. அதேபோல பூசாரிபட்டியில் காளியம்மன் கோயில் பின்புற தெரு பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்க ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

மேலும் பூசாரிபட்டி மெயின் ரோடு பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மேலும் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பரமேஸ்வரி முருகன், வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் முனியாண்டி, மல்லணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

The post வத்தலக்குண்டு அருகே ரூ.27 லட்சத்தில் குடிநீர் திட்ட பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: