பல்லடம்,ஆக.19: பல்லடம் வடுகபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சுற்று சுவர் கட்ட பங்களிப்பு நிதியாக முன்னாள் மாணவர் எஸ்.துரைராஜ் ரூபாய் 3.67 லட்சம் மற்றும் பேவரட் பிளாக் தரைத்தளம் அமைக்க முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக ரூபாய் 1 லட்சத்து 67 ஆயிரம் ஆக மொத்தம் ரூபாய் 5 லட்சத்து 34 ஆயிரத்திற்கான காசோலையை பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமாரிடம் பள்ளி முன்னாள் மாணவர்கள் வி.கே. சத்தியமூர்த்தி, மா. பாலசுப்பிரமணியம், திண்டு பாலு, பொறியாளர் மோகன கண்ணன், ரகு, அறம் கணேசன், பள்ளி ஆசிரியர்கள் ராமநாராயணன், சுமத்ராதேவி, செல்வராணி உள்ளிட்டோர் வழங்கினர். பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மொத்தம் ரூபாய் 16 லட்சத்தில் திட்டப்பணிகள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பல்லடம் நகராட்சி ஆணையாளர் முத்துசாமி, மேலாளர் சண்முகராஜன், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், பணி மேற்பார்வையாளர் ராசுகுட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
The post வடுகபாளையம் அரசு பள்ளிக்கு நமக்கு நாமே திட்டத்திற்கு நிதி வழங்கல் appeared first on Dinakaran.