திருமங்கலம்: திருமங்கலத்தில் உள்ள மதுரை ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அமைந்துள்ளது. வங்கிக்கு நேற்று விடுமுறை நாளாகும். இந்நிலையில் காலை 10.30 மணியளவில் வங்கியின் அலாரம் திடீரென ஒலிக்கத் துவங்கியது. இதனால் கொள்ளையர் யாரும் வங்கியில் புகுந்து விட்டனரா என எண்ணி வங்கி கிளை முன்பு பொதுமக்கள் திரண்டனர்.
தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வங்கி நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கவே அவர்கள் வந்து வங்கியை திறந்த பார்த்தனர். அப்போது, வயரை எலி கடித்ததால் அலாரம் ஒலித்தது தெரியவந்தது. இதனால் போலீசார் மற்றும் வங்கி ஊழியர்கள் நிம்மதியடைந்தனர். இந்த சம்பவத்தால் வங்கி அமைந்துள்ள பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை நிலவியது
The post வங்கியில் தொடர் அலாரத்தால் பரபரப்பு appeared first on Dinakaran.