லாரி,கார் மோதலில் ஒருவர் பலி

ராமநாதபுரம், ஜூலை 18: ராமேஸ்வரத்திலிருந்து தூத்துக்குடிக்கு சரக்கு லாரியில் மீன்களை ஏற்றிக் கொண்டு கடலாடி அருகே கடுகுசந்தை சத்திரத்தை சேர்ந்த டிரைவர் மாணிக்கம்(40) சென்று கொண்டிருந்தார். ராமநாதபுரத்தில் இருந்து மண்டபம் நோக்கி வந்த கார் சாத்தன்கோன் வலசை என்ற இடத்தில் மோதியது. இதில் கார் நொறுங்கியது, லாரி கவிழ்ந்தது. விபத்தில் கார் டிரைவர் மண்டபத்தை சேர்ந்த ரகுமான்கான் (43) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் வந்த நூர்நிஷா (40), ஹாதுன் பவுசியா(24), பர்வீன் (23) மற்றும் லாரி டிரைவர் மாணிக்கம், உதவியாளர் அசாம் மாநிலத்தை சேர்ந்த அஜய்(38) ஆகியோர் காயமடைந்தனர். உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post லாரி,கார் மோதலில் ஒருவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: