ராமகிருஷ்ணா கல்லூரியுடன் கே.எஸ்.ஆர். கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை, மே 14: கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியுடன், திருச்செங்கோடு கே.எஸ். ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டது. எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி, கே.எஸ்.ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தலைவர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.இந்நிகழ்ச்சியில், ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுரி முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார், திருச்செங்கோடு கே.எஸ். ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனர்.

இதன்மூலம், இருகல்வி நிறுவனங்களின் ஒருமித்த விருப்பத்தின் அடிப்படையில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த கற்றல் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஒப்பந்தத்தின்போது, கல்லூரி தேர்வுகட்டுப்பாட்டு அலுவலர் வி.விஜயகுமார், துணை முதல்வர் முனைவர் எஸ்.தீனா, அகமதிப்பீட்டுக்குழு மற்றும் தேசிய தர நிர்ணயக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் என்.உமா, ஐ.பர்வீன்பானு, வி.கிருஷ்ணபிரியா, கே.எஸ்.ஆர். கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் எம்.பிரசாத், வணிகவியல் துறைத்தலைவர் மகேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

The post ராமகிருஷ்ணா கல்லூரியுடன் கே.எஸ்.ஆர். கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Related Stories: