×

ராகி அறுவடை பணி தீவிரம்

தர்மபுரி, ஜூன் 12: தர்மபுரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள ராகி அறுவடை பணி தொடங்கியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட, நடப்பாண்டு 34 ஆயிரம் ஏக்கரில் ராகி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பென்னாகரம், பாலக்கோடு, மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், பொம்மிடி, அரூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக ராகி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது சாகுபடி செய்யப்பட்ட ராகி அறுவடை பணி தொடங்கியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘நடப்பாண்டு உலகம் முழுவதும் சிறுதானிய ஆண்டாக கடைபிடிக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தை சிறுதானிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் 34 ஆயிரம் ஏக்கரில் ராகி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள் மூலம் ராகி குடும்பத்திற்கு 2 கிலோ வழங்க, தர்மபுரி மாவட்டத்தில் விளையும் ராகிகளை கொள்முதல் செய்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.

The post ராகி அறுவடை பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED தம்பதியை கொலை செய்து சடலங்களுடன்...