ரயில் நிலைய வளாகத்தில் தேசியக்கொடி மாற்றம்

 

திருப்பூர்,பிப்.26: திருப்பூர் ரயில்நிலைய வளாகத்தில்கிழிந்த நிலையில் பறக்க விட்டிருந்த தேசியக்கொடியை தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டதற்கு பிறகு மாற்றம் செய்யப்பட்டது. திருப்பூர் ரயில் நிலையத்திற்கு தினசரி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் ரயில்கள் மூலம் வருகின்றனர். பனியன் தொழில் நிறைந்த பகுதியாக உள்ளதால் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் திருப்பூர் நோக்கி வருகின்றனர். இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சகம் அனைத்து ரயில் நிலையங்களிலும் நாட்டின் தேசியக்கொடியை பறக்கவிட வேண்டுமென உத்தரவுபிறப்பித்திருந்தது.

அதன்படி அனைத்து ரயில் நிலையங்களின் வளாகத்திலும் தேசியக்கொடியை பறக்கவிட்டுள்ளனர். திருப்பூர் ரயில் நிலைய வளாகத்திலும் உயரமான கொடிக்கம்பகத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக ஒரே கொடியை பறக்கவிடப்பட்டிருந்ததால் அந்த தேசியக்கொடியில் அழுக்குகள் படித்து, ஓரத்தில் கிழிந்த நிலையில் இருந்தது. இது குறித்து தினகரன் நாளிதழ் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தது. அந்த செய்தியின் எதிரொலியாக திருப்பூர் ரயில் நிலைய வளாகத்தில் புதிய தேசியக்கொடி மாறப்பட்டுள்ளது.

The post ரயில் நிலைய வளாகத்தில் தேசியக்கொடி மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: