ரயில்வே அமைச்சர் திட்டவட்டம் தனியார்மயமாகாது

புதுடெல்லி: மக்களவையில் நடந்த ரயில்வே அமைச்சகத்திற்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, ‘ஏர் இந்தியாவை தொடர்ந்து ரயில்வேயையும் ஒன்றிய அரசு தனியாரிடம் தாரை வார்க்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது’, ‘ரயில்வேயில் காலி பணியிடங்களை அரசு நிரப்பாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது’ என எதிர்க்கட்சி எம்பிக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினர். விவாதத்திற்கு பதிலளித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:ரயில்வேயில் வழக்கமான முறையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. தற்போது கூட 1.14 லட்சம் பணியிடங்கள் நிரப்பும் பணி நடந்து கொண்டிருக்கிறது. எனவே, ரயில்வேயில் ஆள்சேர்ப்புக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. ரயில்வேயை தனியார் மயமாக்க அரசு முயற்சிப்பதாக கூறப்படுவது கற்பனையான குற்றச்சாட்டு.தண்டவாளம், ரயில் நிலையங்கள், இன்ஜின்கள், ரயில்கள், சிக்னல் அமைப்புகள் அனைத்துமே ரயில்வேக்கு சொந்தமானது. ரயில்வே அரசுக்கு சொந்தமானது. ரயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை. அதே போல, சரக்கு போக்குவரத்தை தனியார்மயமாக்கும் திட்டமும் இல்லை. ரயில்வே தனது சமூகக் கடமைகளை தொடர்ந்து நிறைவேற்றும். இவ்வாறு அவர் கூறினார். இதைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் ரயில்வேக்கான மானியக் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது….

The post ரயில்வே அமைச்சர் திட்டவட்டம் தனியார்மயமாகாது appeared first on Dinakaran.

Related Stories: