ரம்பூட்டான் ரகசியம்!

நன்றி குங்குமம் டாக்டர் நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் கனிகளின் பங்களிப்பு அளப்பரியது. அத்தகைய பழங்களில் ஒன்று ரம்பூட்டான். தற்போது பரவலாக எல்லா; இடங்களிலும் விற்கப்படுகிற இதன் மருத்துவ குணங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்…* ரம்பூட்டான் பழம் ஆசிய நாடுகளான மலேசியா மற்றும் இந்தோனேஷியாவைத் தாயகமாக கொண்டது. 100 கிராம் அளவு உடைய ரம்பூட்டானில், கலோரி; 84%-மும், வைட்டமின்-சி 40%-மும், இரும்புச்சத்து 28%-மும் உள்ளது.* வித்தியாசமான பெயரையும், தோற்றத்தையும் கொண்ட ரம்பூட்டானின் மேற்புறம் முள்ளுமுள்ளாக காணப்படும். பழத்தின் உள்ளே இனிப்பு மற்றும் புளிப்பு சுவை; கலந்த வெண்மையான சதைப்பகுதி காணப்படும். பாதாம் பருப்பு அளவு விதை கொண்ட இப்பழத்தின் நறுமணம் சுண்டி இழுக்கும் தன்மை கொண்டது.* ரம்பூட்டானில் வைட்டமின்-சி ஏராளமாக இருக்கிறது. அதனால், உடல் பருமனைக் கட்டுப்படுத்த இப்பழம் பயன்படுகிறது. எனவே, உடல் பருமனால்; அவதிப்படுவர்கள் ரம்பூட்டானை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுமாறு ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.* ரம்பூட்டான் (Rambhutan) என்பது இந்தோனேஷிய வார்த்தை. இதற்கு முடியடர்ந்த (Hairy) எனப் பொருள். இந்தப் பழத்தின் மேற்பகுதி பச்சை நிறத்தில்; காணப்படும். மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளைத் தாயகமாக, இக்கனி கொண்டு இருந்தாலும், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற; நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.;; ;* இதய குழாய்களில் உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கும் கெட்ட கொழுப்பு சேர்வதை ரம்பூட்டான் தடுக்கிறது. இதன் காரணமாக, மாரடைப்பு ஏற்படுவது; கட்டுப்படுத்தப்படுகிறது.* ரம்பூட்டானில் உள்ள நியாசின் என்ற வேதிப்பொருள், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த செய்கிறது. ஆன்டி ஆக்சிடென்ட் இந்தப் பழத்தில் அதிகமாக; இருப்பதாகவும் தெரிய வந்து உள்ளது. மேலும் ரம்பூட்டான் பழமானது ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்துவதோடு கண் ஆரோக்கியத்துக்கும் பெரிதும் உதவுகிறது.* நம்முடைய உடல் உறுப்புக்களில் பெரும்பாலானவற்றைப் பாதுகாப்பதில், இதன் பங்கு குறிப்பிடத்தக்கது. முக்கியமாக, தலைமுடி, தோல் மற்றும் கை, கால்; நகங்கள் ஆகியவை பளபளப்புடன் இருக்க ரம்பூட்டான் உதவி செய்கிறது.* நம்முடைய உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்க வைக்கிற இரும்புச்சத்து இதில் ஏராளமாக காணப்படுகிறது. இதன் காரணமாக, ஹீமோகுளோபின்; உற்பத்தி அதிகளவில் இருக்கிறது. இது நுரையீரலில் இருந்து ஆக்சிஜனைப் பல திசுக்களுக்கு அனுப்பும் வேலையைத் திறம்பட செய்கிறது.* நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பழ வகைகளிலேயே, ஏராளமான வைட்டமின்களைக் கொண்டதாக இந்தக் கனி திகழ்கிறது. அதாவது, 83 வகையான; வைட்டமின்கள் இதில் உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைட்டமின்கள் தாம்பத்ய வாழ்வு சிறக்க துணை செய்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.* நமது எலும்பு மண்டல வளர்ச்சிக்கு உதவக்கூடிய கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இந்தக் கனியில் அதிகம் உள்ளன. ஆகவே, எலும்புகள்; வலிமையாக்கப்பட்டு அவை முறிவுக்கு உள்ளாவது தடுக்கப்படுகிறது,* ரம்பூட்டான் பழத்தின் தோல் பகுதி சீதபேதியைக்(Dysentery) குணப்படுத்த வல்லது. அதுமட்டுமில்லாமல் பல நாட்களாக நீடிக்கும் நாள்பட்ட; நோய்களையும் சரி செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு.* ரம்பூட்டான் பழத்தைத் தொடர்ந்து உணவில் சேர்த்து வருவதால், ரத்தத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறிப்பிடத் தகுந்த அளவில்; உயர்கிறது என்கிறார்கள் ஊட்டசத்து நிபுணர்கள். உடல் சீரான வளர்ச்சி பெறுவதற்கு, இந்தப் பழம் முக்கிய பங்காற்றுகிறது.* கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துக்கள் இதில் ஏராளமாக இருப்பதால், உடல் உழைப்புக்குத் தேவையான ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. மேலும், இதைச்; சாப்பிட்ட சிறிது நேரத்துக்குள் எனர்ஜியாக மாற்றம் பெறுகிறது.* நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், நாக்கு வறண்டு போவதை உடனடியாக நிவர்த்தி செய்கிறது. எனவே, விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஏற்ற பழமாகவும்; ரம்பூட்டான் திகழ்கிறது.* புற்றுநோய் பரவுவதைத் தடுத்து, அந்நோயின் பாதிப்புக்கு உள்ளானவர்களைக் குணப்படுத்துவதில் சிறந்த மருந்தாக இந்தப் பழம் திகழ்கிறது.தொகுப்பு : விஜயகுமார்

The post ரம்பூட்டான் ரகசியம்! appeared first on Dinakaran.

Related Stories: