மேலூர் அரிட்டாபட்டியை சேர்ந்தவருக்கு தமிழக அரசின் சுற்றுச்சூழல் பசுமை விருது

மேலூர், ஜூன் 7: உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அளவிலான சுற்று சுழல் பசுமை விருது, மேலூர் அருகில் உள்ள அரிட்டாபட்டி ரவிச்சந்திரனுக்கு வழங்கப்பட்டது. இதற்கான கர்மவீரர் காமராஜர் விருதினையும், ரூ.15 ஆயிரம் ரொக்கமும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர் மெய்யப்பன் வழங்கினார். ரவிச்சந்திரன் அரிட்டாபட்டி ஏழுமலை பாதுகாப்பு சங்க செயலாளராகவும், அரிட்டாபட்டி பறவைகள் மற்றும் பல்லூயிர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

தமிழ்நாடு அரசின் முதல் பல்லுயிர் தளமாக அரிட்டாபட்டி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அரிட்டாபட்டியில் உள்ள நீர்நிலைகள் பாதுகாப்பு, மலை பாதுகாப்பு, பனை விதை நடவு, உள்ளூர், வெளியூர் முதல் வெளிநாட்டு மாணவ, மாணவியருக்கு இப்பகுதியில் வரலாறு, பறவை மற்றும் பல்லுயிர் போன்ற விளக்கங்களை தொடர்ந்து அளித்து வருவதனால், ரவிச்சந்திரனுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

The post மேலூர் அரிட்டாபட்டியை சேர்ந்தவருக்கு தமிழக அரசின் சுற்றுச்சூழல் பசுமை விருது appeared first on Dinakaran.

Related Stories: