×

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் விளைந்துள்ள கண்களை கவரும் கலர்புல் காளான்கள்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்த்தியான வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் வண்ண வண்ண காளான்கள் பூத்துள்ளன. திருவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையைப் பொறுத்தவரை மிகுந்த அடர்த்தியான வனப் பகுதியாகும். இந்த மலைப்பகுதியில் பல்வேறு அரிய வகை மூலிகை செடி, கொடியிலும் உள்ளன. மிகுந்த அடர்த்தியான வனப்பகுதிகள் இருப்பதால் இந்த வனப்பகுதிக்குள் மலைவாழ் மக்கள், வனத்துறையினர் ஆகியோர் தவிர அடர்த்தியான வனப்பகுதிகளுக்கு வேறு யாரும் செல்ல முடியாது. எனவே இந்தப் பகுதி வனவிலங்குகளுக்கு வாழ ஏற்ற உகந்த இடமாக உள்ளது. இதனால் இந்த வனப்பகுதியில் புலிகள் சிறுத்தைகள் யானைகள் கரடிகள் மான்கள் காட்டெருமைகள் என ஏராளமான வனவிலங்கு வசித்து வருகின்றன இதனால் இந்த மலைப் பகுதியை அரசு திருவலிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகமாக அறிவித்துள்ளது. இந்தச் சூழலில் இந்த திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் பல வண்ண நிறங்களை உடைய வண்ண வண்ண காளான்கள் பூத்துள்ளது. மழைக்காலங்களான நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் அதிக அளவு மழை பெய்யும் போது இந்த காளான்கள் முளைக்கின்றன. இத்தகைய வண்ண வண்ண காலங்கள் பார் திருவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் முளைத்துள்ள வண்ண வண்ண நிறத்தை உடைய காளான்கள். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். பெரும்பாலும் மலையின் உச்சிப் பகுதிகளில் செல்லும் பாதைகளில் இத்தகைய காளான்கள் அதிக அளவு முளைத்திருக்கும். பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இந்த காளான்கலை உணவுக்கு பயன்படுத்த முடியாது என்கின்றனர் அங்குள்ள மலைவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்….

The post மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் விளைந்துள்ள கண்களை கவரும் கலர்புல் காளான்கள் appeared first on Dinakaran.

Tags : Western Ghats ,Thiruvilliputhur ,Tiruvilliputhur ,
× RELATED விளைநிலங்களுக்குள் புகுந்து...