மூணாறில் முக்குக்கு முக்கு தெருநாய்கள் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அச்சம்

 

மூணாறு,அக். 21: சர்வதேச சுற்றுலத் தலமான மூணாறிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சுற்றித்திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். பிரபல சுற்றுலா தலமான மூணாறில் சாலையோரங்களில் தூக்கி எரியப்படும் இறைச்சி மற்றும் உணவுகள் கழிவுகளால் வளர்ப்பு நாய்களும் உணவுக்காக தெருவில் நடமாட தொடங்கி உள்ளன. இந்நிலையில் நகரிலும் அருகே உள்ள பகுதிகளிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, இதனால் பாதசாரிகளும், வியாபாரிகளும், சுற்றுலா பயணிகளும் மற்றும் வாகன ஓட்டிகளும் பாதிப்படைந்து வருகின்றனர்.

நாய்கள், துரத்துவதும், கூட்டமாக நகரில் சுற்றி திரிவதும் பாதசாரிகளை அச்சமடையச் செய்கிறது. உடம்பு முழுவதும் சொறி சிரங்குகளுடனும், காயங்களுடனும் சுற்றித்திரியும் நாய்களால் நகரில் நடமாட பலரும் அச்சப்பட்டு வருகின்றனர்.மேலும் பள்ளிகூடங்களுக்கு செல்லும் குழந்தைகளுக்கு சாலையில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவது பெற்றோர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் மூணாறு நகர், மாட்டுப்பெட்டி சந்திப்பு, போஸ்ட் ஆபீஸ் சந்திப்பு, பெரியவாரை, நல்ல தண்ணி ஆட்டோ ஸ்டேண்ட், பழைய மூணாறில் உள்ள ஊராட்சியின் பார்க்கிங் மைதானம் போன்ற பகுதிகளில் கூட்டமாக சுற்றி திரிகிறது.ஆபத்தான தெரு நாய்களை மூணார் ஊராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மூணாறில் முக்குக்கு முக்கு தெருநாய்கள் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: