மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த பெண்களுக்கான திட்டத்தால் வியப்பு..கோவையில் திமுகவுக்கு ஆதரவாக ருமேனியாவை சேர்ந்தவர் பிரசாரம்: டவுன் பஸ்களில் பயணித்து ஓட்டு சேகரிப்பு

கோவை: தொழில்முறை பயணமாக கோவைக்கு வந்த ருமேனியா நாட்டை  சேர்ந்த ஸ்டெபன் என்ற நபர் டவுன் பஸ்சில் பயணித்தார். அப்போது அரசு பஸ்களில் பெண்கள்  இலவச பயணம் மேற்கொள்ளலாம். இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அறிவித்தார் என்ற செய்தி அவருக்கு தெரியவந்தது. அதில் வியந்துபோன அவர் திமுகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் களம் இறங்க முடிவு செய்தார். அதன்படி உதயசூரியன் சின்னம், திமுக கொடியை கையில் ஏந்திக்கொண்டு அரசு டவுன் பஸ்களில் ஏறி திமுகவுக்கு ஓட்டு சேகரித்தார்.  உள்ளூர் நண்பர் கோகுல் என்பவர் உதவியுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்தபடியும் அவர்  திமுகவுக்கு பிரசாரம் செய்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘மகளிருக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இலவச பயண திட்டம் பற்றி அறிந்தேன்.  இது உண்மையிலேயே மகத்தான திட்டம். இத்திட்டம் என்னை கவர்ந்தது. அதனால் திமுகவுக்கு  ஆதரவாக உள்ளூர் நண்பர்களுடன் இணைந்து டவுன் பஸ் மற்றும் பைக்குகளில் சென்று  வாக்கு சேகரித்தேன். எங்கள் நாட்டில் நடக்கும் தேர்தல் பிரசாரம் வேறு  மாதிரியாக இருக்கும். ஆனால், தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தல் பிரசாரம் என்னை கவர்ந்துள்ளது. தமிழக முதல்வரின் செயல்பாடு என்னை வெகுவாக ஈர்த்ததால் திமுகவுக்கு ஆதரவாக  பிரசாரத்தில் ஈடுபட்டேன். ’’  என்றார்.சிங்கிள் டீக்கு வழியில்லையா…வேலூர் மாநகராட்சியில் நேற்று காலையில் மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது, காலை 11.30 மணியளவில், மாநகராட்சிக்கு டீ வாங்கி வரப்பட்டது. இந்த பெரிய பிளாஸ்க்கில் கொண்டுவரப்பட்ட, டீ கீழ் தளத்தில் இருக்குற தேர்தல் பிரிவுக்கு மட்டும் போய் இருக்குது. 12 மணி வரைக்கும் அந்த டீ பிளாஸ்க் அங்கே இருந்திருக்குது. மற்ற 2 தளங்களில் உள்ள பிரிவுகளுக்கு டீ செல்லவில்லை. டீ வராததால், மாநகராட்சி அலுவலர் ஒருவர் டென்ஷனாகி, என்னய்யா.. ஒரு சிங்கிள் டீக்கு இந்த ஆபிசுல வழியில்லையா… இந்த பாடுபடுத்துறீங்க. நாங்க எல்லாம் ேவலை செய்யலையா… நீங்க மட்டும் தான் வேலை செய்றீங்களா என்று அங்கிருந்தவர்கள் கிட்டடென்ஷன் ஆனார்.இதையடுத்து அங்கிருந்த, அலுவலர்கள் அவரை சமாதானப்படுத்தி, டீ கொடுத்தனர். இந்த டீ மேட்டரால, மாநகராட்சியே சிறிது நேரம் அமைதியானது. அலுவலராக இருந்தாலும் அந்த சாண் வயித்துக்குத்தானே இந்த போராட்டம். அதுவே இல்லைன்னா, எப்படி, டீ… அத, கொண்டு வந்த உடனே அனைவருக்கும் கொடுக்கணும்லன்னு, அங்கிருந்தவங்களே பேசிக்கிட்டாங்க….

The post மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த பெண்களுக்கான திட்டத்தால் வியப்பு..கோவையில் திமுகவுக்கு ஆதரவாக ருமேனியாவை சேர்ந்தவர் பிரசாரம்: டவுன் பஸ்களில் பயணித்து ஓட்டு சேகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: