முளைக்கொட்டு விழா

கீழக்கரை, ஆக.31: கீழக்கரை தாலுகா மாயாகுளம் ஊராட்சி பாரதி நகரிலுள்ள சித்தி விநாயகர், முத்துமாரியம்மன், கருப்பண்ண சாமி, பாலமுருகன் ஆலயத்தின் 31ம் ஆண்டு முளை கொட்டு விழா நடந்தது. விழாவை முன்னிட்டு ஆக.22ம் தேதி மாலை காப்பு கட்டி முத்து பரப்புதல் நடைபெற்றது. ஆக.30ம் தேதி காலை 7 மணி அளவில் சின்ன மாயாகுளம் செல்வ விநாயகர் ஆலயத்திலிருந்து பால்குடம், வேல் காவடி, ரதம் ஊர்வலமாக புறப்பட்டு பாரதி நகர் முத்துமாரியம்மன் ஆலயம் வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து மாலை 3 மணி அளவில் அம்மன் ஆலயத்தில் இருந்து முளைப்பாரி கரகம் புறப்பட்டு கடற்கரை சென்று பூரணம் நடைபெற்றது.

The post முளைக்கொட்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: