திருவனந்தபுரம்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், முல்லை பெரியார் அணையின் நீர்மட்டம் 141 அடி ஆனதால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியானால் முறையே இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்படும் என முல்லை பெரியாறு ஆணையின் தமிழக பொது பணித்துறை பொறியாளர் குழுவினர் தெரிவித்தனர். பருவ மழை வலுத்தால் எந்நேரமும் 142 அடியை தொடும் எனவும் கேரளவிற்குள் உபரிநீர் திறப்பும், தமிழத்திற்குள் நீர் வெளியேற்றமும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேரளவிற்குள் முல்லை பெரியாறு அணை துவங்கி சப்பாத்து, வண்டிபெரியாறு, உப்புக்கரை முதல் மழைநீர் சென்றடையும். தமிழகத்திற்குள் தேனிமாவட்டம் லோயர் கேம்ப் துவங்கி வைகை அணை வரையிலான முல்லை பெரியாற்றின் நீரோட்ட பாதைகள் அருகே இருக்கும் மக்கள், எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தபட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி முல்லை பெரியாறு அணைக்கு வினாடிக்கு 1,116 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது….
The post முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு: எந்நேரமும் அணை 142 அடியை எட்டும்..பொதுப்பணித்துறை தகவல்..!! appeared first on Dinakaran.