முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளாவின் குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை: அணை வலுவாக உள்ளதாக ஒன்றிய அரசு அறிக்கை

புதுடெல்லி: ‘முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள மாநிலத்தின் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றவை’ என உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள ஒன்றிய அரசு, அணை மிகவும் வலுவாக உள்ளது என திட்டவட்மாக தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் நடவடிக்கை எடுக்கும் விதமாக துணைக்குழு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆகியவை ஒன்றாக இணை ந்து செயல்பட வேண்டும் என கடந்த 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு துணைக்குழுவை கலைக்க கோரியும், அணை பாதுகாப்பு மற்றும் இயக்கமுறைகள் சரியாக இல்லை என ஜாய் ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அதுகுறித்து  விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு கடந்த 9ம் தேதி உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் 500 பக்கம் கொண்ட அறிக்கையை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்துள்ளது. அதில், ‘முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் அதிகப்படியான நீர் வரத்தை அடிப்படையாகக் கொண்டு அதன் பாதுகாப்பு கருதி 142 அடி நீரை தேக்குவதற்கு அனுமதிக்கக்கூடாது என்ற கேரள அரசின் கணக்கீடு முற்றிலும் தவறானதாகும். அணை பாதுகாப்பு தொடர்பான கேரள அரசின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை ’.மேலும் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி ‘முல்லைப் பெரியாறு அணையின் கண்காணிப்பு, அணை, மதகு திறப்பு, அணையின் இயக்கங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கிய அறிக்கை தயாரித்து இறுதி செய்யப்பட்டு அதை அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழுவுக்கு தமிழக அரசு முன்னதாக அளித்து விட்டது’.‘தமிழக அரசின் இயக்க முறையை ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்கிறது’. என தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளாவின் குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை: அணை வலுவாக உள்ளதாக ஒன்றிய அரசு அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: