முத்தாரம்மன் கோயிலில் மா விளக்கு சிறப்பு பூஜை

உடன்குடி, ஜூலை 16: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தமிழ்மாத கடைசி வெள்ளி தோறும் மாவிளக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஆனி மாத கடைசி வெள்ளிகிழமையை முன்னிட்டு காலை 6மணிக்கு நடை திறக்கப்பட்டு 8 மணிக்கு காலசந்தி பூஜை நடந்தது. நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7.30மணிக்கு 108 மாவிளக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

The post முத்தாரம்மன் கோயிலில் மா விளக்கு சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Related Stories: