முதலமைச்சர் நல்ல பாதையில் வழி நடத்துகிறார் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

 

நாகப்பட்டினம்,நவ.21: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நாகப்பட்டினத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள ஆன்லைன் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேதாரண்யத்தில் உள்ள புனித அந்தோணியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் வரும் 2ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சார்ந்த 18 வயதிலிருந்து 35 வயதிற்கு உட்பட்ட ஆண் மற்றும் பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.

8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, கலை, அறிவியல், வணிகப் பட்டதாரிகள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல், தையல்கலை பயிற்சி பெற்றவர்ள் கலந்து கொண்டு பயன்பெறலாம். 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்பற்றவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வி தகுதி குறித்த விவரங்கள் முன்பே பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார்.

The post முதலமைச்சர் நல்ல பாதையில் வழி நடத்துகிறார் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: