இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்: டுவிட்டரில் #babrimasjid என்ற ஹெஷ்டேக் டிரெண்டிங் ஆகி இந்தியளவில் முதலிடம்.!!!

டெல்லி: பாபர் மசூதி இடிப்பு தினத்தை நினைவூட்டும் வகையில், #babrimasjid என்ற ஹெஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. அயோத்தி நகரம் இராமர் பிறந்த இடமென்றும் இந்தியாவின் புனிததன்மை வாய்ந்த இடங்களுள் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இங்கு, 1528-ல் முகலாயர் ஆட்சியில் முகலாய படைத்தலைவர் மிர் பாங்கியினால் முகலாயப் பேரரசர் பாபரின் பெயரால் ஒரு மசூதி கட்டப்பட்டது.

அங்கிருந்த இராமர் கோயிலை இடித்த பின்னரே, மீர் பாங்கி மசூதியைக் கட்டினார் என்று கருதப்படுகிறது. பல ஆண்டுகளாக இவ்விடம் இந்துக்களாலும், இஸ்லாமியர்களாலும் மத வழிபாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்திய  விடுதலைக்குப் பிறகு, பல இயக்கங்கள் அவ்விடத்தைச் சொந்தம் கொண்டாடி வழக்குகள் தொடர்ந்தன. இதற்கிடையே, கடந்த செப்டம்பர் 1990-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, அயோத்திச் சிக்கலை நாடெங்கும்  எடுத்துச் செல்லும்பொருட்டு ஓர் இரத யாத்திரை தொடங்கினார். இதனால் நாடெங்கும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, 1992-ம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் நாடெங்கிலிருந்தும் கரசேவகர்கள் அயோத்தியில் வந்து குவிந்தனர். தொடர்ந்து, அவர்களால் டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதன்படி, பாபர் மசூதி இடிக்கப்பட்டு இன்றுடன்  28-வது ஆண்டுகள் ஆகிறது. இதற்கு எதிராக பல்வேறு இடங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. கலவரங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க முக்கிய பகுதிகளில் போலீசார் அதிகளவு குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாபர் மசூதி இடிப்பு தினத்தை நினைவூட்டும் வகையில், #babrimasjid என்ற ஹெஷ்டேக் டுவிட்டரில் இணையவாசிகள் டிரெண்டிங் செய்து வருகின்றனர். இந்த #babrimasjid ஹெஷ்டேக் உலகளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது. தற்போது, இந்த ஹெஷ்டேக் இந்தியளவில் டுவிட்டரில் முதலிடத்தில் உள்ளது. இதனைபோல், #6december, Jai Shree Ram, Babur ஆகிய ஹெஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.

Related Stories: