மீன் வளர்ப்பு பயிற்சி முகாம்

ஆர்.எஸ்.மங்கலம்,பிப்.20: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கடலூர் ராஜீவ் காந்தி மீன் வளர்ப்பு மையத்தில், தமிழக அரசின் அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் மத்திய அரசின் அறிவியல் அமைச்சக நிதி உதவியுடன், தேசிய மீன்வள மரபணு பேனகம், கடல் வண்ண மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி நடைபெற்றது. முகாமில் தொண்டியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக கடல் அறிவியல் துறை பேராசிரியர் ரவிக்குமார் கலந்து கொண்டு கடல் அறிவியல் துறை குறித்தும், கடல் வாழ் உயிரினங்களின் வளர்ப்பு முறைகள் குறித்தும், மீனவர்களிடம் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து பயிற்சியில் சிறப்பாக செயல்படும் மீனவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தொடர் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும். கடல் வண்ண மீன்கள் வளர்ப்பதற்கான மத்திய, மாநில அரசின் உதவிகள் வழங்கப்படும் எனவும் பயிற்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதில் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மீனவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மீன் வளர்ப்பு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: