மீனவர் பங்கு தொகை நிலுவை செலுத்த அறிவிப்பு

மதுரை, அக். 18: மதுரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் உள்நாட்டு மீனவர்- மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்களில் குறைந்தபட்ச பங்கு தொகையான ரூ.100 மற்றும் நுழைவு கட்டணம் ரூ.10ஐ செலுத்திடாத உறுப்பினர்கள் தங்களது பங்கு தொகை நிலுவை தொகையினை சங்கத்தின் தலைவர்- செயலாட்சியர் இடம் 25.10.2023க்குள் முழுவதுமாக செலுத்தி சங்க உறுப்பினர் தகுதியினை தக்க வைத்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

தவறும்பட்சத்தில் சங்க உறுப்பினர் பட்டியலில் இருந்து உறுப்பினர் பெயர் நீக்கப்படும். இதுநாள் வரை தங்களது ஆதார் எண், குடும்ப அட்டை எண் ஆகியற்றை உறுப்பினர் பட்டியலில் பதிவுகள் மேற்கொள்ளாத உறுப்பினர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்தும் பெயர் நீக்கப்படும். மேலும் எதிர்வரும் மீனவர் கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிடவோ மற்றும் வாக்களிக்கவோ தகுதியற்றவர்களாக கருத்தப்படும் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

The post மீனவர் பங்கு தொகை நிலுவை செலுத்த அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: