மாவட்டத்தில் தொழிற்சாலைகளின் உரிமத்தை 31ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும்

திருவள்ளூர், அக். 19: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற தொழிற்சாலைகள் வரும் 2024ம் ஆண்டிற்கான தொழிற்சாலைகளின் உரிமத்தினை இணையதளம் மூலமாக புதுப்பிக்க வருகின்ற 31ம் தேதி கடைசி நாளாகும். எனவே தோழிற் சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற தொழிற்சாலைகள் தொழில்சாலை உரிமத்தை புதுப்பிக்கும் dish.tn.gov.in என்ற இணையதள முகவரியில் உரிம கட்டணத்தை செலுத்தி படிவம் 2ஐ சமர்ப்பித்து உரிமத்தை புதுப்பித்து இணைய வழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தாமதமாக விண்ணப்பிக்கப்படும் விண்ணப்ப படிவங்களுக்கு தாமத கட்டணம் வசூலிக்கப்படும். நவம்பர் 30ம் தேதி வரை 10 சதவீதமும், டிசம்பர் 31ம் தேதி வரை 20 சதவீதமும், அதற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்களுக்கு 30 சதவீதமும் தாமத உரிமக் கட்டணத்துடன் கூடுதலாக செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் திருவள்ளூர், ரயில் நிலையம் அருகில் பெரியகுப்பத்தில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் குமார் தெரிவித்துள்ளார்.

The post மாவட்டத்தில் தொழிற்சாலைகளின் உரிமத்தை 31ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: